Skip to main content

நவீன போராட்டம்

நவீன அற(அறிவற்ற) போராட்டங்கள்

Facebookஐ தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு களமாக மட்டும் பயன்படுத்துங்கள் ,அதை விட்டுவிட்டு இதை ஒரு போராட்ட களமாக நினைத்து உணர்ச்சி மிகு பதிவுகளையும்(vidoes and post)  அதனால் சமூக புரட்சி ஏற்படும் என நினைப்பதை விட மிக பெரிய  முட்டாள்தனம் வேற எதுவுமில்லை, மிஞ்சி போனால் நீங்கள் போடும் பதிவுகளுக்கு  உங்களுக்கு Like and comment or Reaction கிடைக்கும் அவ்வளவுதான்.

ஒரு கருத்தை பகிரவும் , தகவல் சொல்லவும், பொழுது போக்கிற்காகவும் பயன் படுத்துங்கள்,  America வில் 2011 ஆம் ஆண்டு ஒரு போராட்டம் நடைபெற்றது "Occupy Wall Street" என்ற இப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு, Facebook இல் போராட தெரியாமல் இல்லை, அவர்களுக்கு தெரியும் Facebook இல் அற போர் என்று கூறினால் ஒரு மண்ணுக்கும் உதவாது என்று, வீதியில் இறங்கி போராடினார்கள், உலகமே அவர்களை உற்று நோக்கியது, Americaவின் பொருளாதாரத்தின முதுகெலும்பனா  Wall Street ஸ்தம்பித்தது

Facebook இல் share  செய்வது ஒரு போராட்டமே அல்ல, தாங்கள் ஒரு தகவலை பரிமாறி கொள்கிறீர்கள் அவ்வளவே.

நம் தமிழ்நாட்டில் அத்தகைய போராட்டம் 2013ஆம் மாணவர்களால் முன்னெடுக்க பட்டது, ஐநா வில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவை நிர்ப்பந்திக்க நடத்த பட்ட இப்போராட்டம் வெற்றியும் பெற்றது.

தெருவில் இறங்கி நடத்தினால் மட்டுமே அது போராட்டமாகும் ,அதுவே இச்சமுகத்தில் எழுச்சியையும் ,மாற்றத்தையும் கொண்டு வரும். அதை விட்டுவிட்டு FB புரட்சி வசன video share செய்வது உதவாது,இது வெறும் Online popularity அன்றி வேறு ஒன்றுமில்லை.

PS : இது எனது கருத்து மட்டுமே,ஏற்று கொள்வது அவரவர் விருப்பம்

Comments

  1. Thanks gan, materinya sangat bermanfaat sekali ^^
    Agen Togel Terbaik Agen Togel Online, Situs Togel Pasaran Resmi

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மக்கள் எனும் கொழுக்கட்டைகளும் , யானை எனும் விநாயகரும்

இன்று விநாயகர் சதுர்த்தி, விநாயகர் எனும் யானை முக கடவுளை வணங்கிறோம், விநாயகரின் நிஜ உருவான யானையை மறந்து விட்டோம். யானை வழி தடங்களை அழித்தாகிற்று, அவை வரும் வழியில் ...