இன்று விநாயகர் சதுர்த்தி, விநாயகர் எனும் யானை முக கடவுளை வணங்கிறோம், விநாயகரின் நிஜ உருவான யானையை மறந்து விட்டோம்.
யானை வழி தடங்களை அழித்தாகிற்று, அவை வரும் வழியில் நாம் வீடு கட்டி கொண்டு யானை எனும் மிருகம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் என்று சொல்கிறோம். இதில் ஒரு சில சாமியார்கள் காட்டை அழித்து ஆசிரமம் நடத்துகிறார்கள்.
யானை அட்டகாசம் என்று சொல்லி, மயக்க மருந்து கொடுத்தே ( மதுக்கரை மகராஜ் என்ற யானை சமீபத்தில் )கொன்ற பாவிகள் நாம் தான்
காடுகளினுடே ரயில் வழித்தடம் அமைத்தோம், ஆறறிவு உள்ளதாக சொல்லிக்கொள்ளும் நமக்கு "level crossing " இருக்கிறது.
ஆனால் யானைகள் இந்த ரயில் வழித்தடங்களை தாண்டி செல்லும் என்று எண்ணாமல் 3 யானைகளை கடந்த சில மாதங்களில் இழந்துருக்கிறோம்.
கடவுள் அல்லது கடவுளின் வாகனம் என்று சொல்லியுமே ,யானை ,புலிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டோம்...
ஒரு வேலை எந்த கடவுளிடமும் வாகனம் இல்லையென்றால் , நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் இவற்றை வரலாறு அல்லது அழிந்த உயிரியல் புத்தகத்தில்/பட்டியலில் மட்டுமே பார்க்க முடியும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய "அறம்" எனும் நூலின் ஒரு சிறுகதையான "யானை டாக்டர் " , யானைகளை பற்றிய எண்ணத்தை முற்றிலும் மாற்றி விடும். இந்நூலை மேற்கோள் காட்டியதன் காரணம் அதனை படிக்கும் போதே உங்களுக்கு உணர்த்தி விடும்
Below is the URL for the story.
http://www.jeyamohan.in/12433#.V8p-20lX7qA
யானைகள் ஏன் பாதுகாக்க பட வேண்டும், ஏன் அவை காட்டின் ராஜாவாக அழைக்க பட கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்...
விநாயகர் சிலைகளால் சுற்று சூழல் பாதிக்க படுவதை பற்றி சிந்திக்கும் மக்கள் , யானைகள் அழிவினால் சுற்றுசூழலில் ஏற்படும் வெற்றிடத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனது சற்று வருந்ததக்கது.
நாம் யானைகளை தத்துஎடுத்து வளர்க்க சொல்லவில்லை, யானைகளுடைய காட்டினை அவர்களுக்கே தத்து கொடுங்கள் என்பதே வேண்டுகோள்..
நிஜ விநாயகரான யானையின் பாதுகாப்பை விட்டுவிட்டு , கொழுக்கட்டையாக வாழ்கிறோம்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..!!
Comments
Post a Comment